Monday, February 16, 2009

எது நல்ல திரைப்படம்


ரொம்ப நாளா இந்த கேள்வி என்னை குடயுது...! எது நல்ல திரைப்படம்......?
நல்லா கல்லா கட்டுர படமா..? அப்படின்னா " திருப்பாச்சி, சிவகாசி " இதெல்லாம் இந்த லிஸ்டில சேர்தியா...... (ஐயோ அடிக்க வராதிங்க.....!)

உண்மயா நல்ல படமென்ரது அவரவர் பார்வய பொருத்தது.....பீட்டர்ல சொல்லனுமின்னா......its depends on individual perception...! (ரெபிடெக்ஸ் புத்தகத்துக்கு நன்றி...!)

சோ! ஒரு நடுனிலயான கருத்து ஒரு படைப்பாளி கிட்ட இருந்து வந்த்ததுன்னா அத நாம் ஒத்துக்கலாம் இல்லயா...(ஏன்னா நாமலே ஒரு படைப்பாளி தானே...!)

ஒரு முறை கவிப்பேரரசு (I mean வைரமுத்து, not இயக்குனர் "கவி+ பேரரசு".....) ஒரு பொது நிகழ்ச்சியில் சொன்னார்,,,,,,
(அவர் பாணியில் வாசிக்கவும்)
எது உன் தூக்கத்தை கெடுக்கிறதோ.... உன் இயல்பு வாழ்க்கயை ஒரு கனம்மேனும் பாதிக்குதோ அதுவே ஒரு நல்ல திரைப்படத்திற்கு லட்ச்சணம்........! [இதில் vijayஇன் recent மூவெழுத்து வதைகளும் (குருவி, வில்லு etc etc) மற்றும் இன்று மட்டுமே கடைசி ஷகீலா படங்கலும் இதில் excluded...! இதில் தூக்கம் வராத காரணம் ம்ம்ம்ம் எல்லாருக்கும் தெரியும் தானே...!]

ரீஜென்டா நான் பார்த்த படங்கல்ல என்னை ரொம்ப பாதிச்சது கொஞ்ஞம் இருக்கு..........அது எல்லாத்தயும் ஒன்னொனா உங்களிட்ட பகிர்ந்துகிரேன்!

கல்லூரி
ஹே ராம்
அன்பே சிவம்
இன்னும் பல...............(இங்க நான் english படங்கள் பத்தி விமர்சனம் பன்ன மாட்டென்கோ......! பயப்படாதீங்க...!)

கல்லூரி- எனை மிகவும் பாதித்த படம்.....
it may because of என் சொந்த காரணம்.... இல்லாட்டி என் வாழ்க்கை அனுபவம்...!

எப்படி இருந்தாலும் கல்லூரி சிலபேர் வாழ்கயில் சின்ன சலனத்தயாவது கொண்டுவந்திருக்கும்...முக்கியமா "கோ- எஜுகேசன் படிச்சவங்க, கிராமத்து காலெஜ் போனவுக, ஒரு முறயாவது ல்வ் பன்னவுங்க" இந்த படத்த பார்திருந்தா கட்டாயம் பீல் பன்னிருப்பாங்க...!

கதை- பெருசா ஒன்னும் இல்லீங்க, ஒரு கிராமத்து பிரண்ஸ் கூட்டத்துக்குள்ள ஒரு வெள்ளாடு (தமன்னா), புகுந்துடுது .....! அது எப்படி அந்த நாலு வருசத்த கடத்துது, எப்படி அதுக்கு காதல் பொற்க்குது, அந்த காதல் எப்படி நட்ப வெல்லுது, அது கடைசியில என்னாகுது..... இவ்வளவு தான் மச்சி கதை!...
இதுக்கு மேல விளக்கம் சொல்லனுமின்னா வெரி சாரி, கோ பை a DVD...(rem stop piracy)

கதை சிம்பிளா இருந்தாலும்.......அதை கையான்ட விதம் ஜோர், சும்மா சொல்லக்கூடாது,,, பாலாஜி சக்திவேல் நிஜமாலுமே ஒரு நல்ல டைரக்டர் மட்டும் இல்லை, தைரியமான டைரக்டரும் கூட...... இல்லாட்டி அந்த தர்மபுரி கொடுமயை கையில எடுத்து இருப்பரா....! "தொப்பி தூக்குரேன் சார் (அப்படினா hats off sir)"

இந்த படத்திலயே தமன்னாவயும் (ஹி ஹி ஹி !), கதையயும் தவிர என்னை பாதிச்ச இன்னோரு விசயம்.......ஜோஷ்வா சிரீதர்......என்னமா ட்யுன் பொடிருக்கான் பய புள்ள.........
கொஞ்ஜம் கேட்டு தான் பாருஙளேன்...

சரியா இது தவறா



இந்த படமும் அந்த பாட்டும் கொரஞ்ஜது என்ன ரென்டு நளாவது தூங்க விடல...!

இது தவிர ஒரு சிச்சுவேசன்,,,,,,, என்ன ரொம்ப பாதிச்சுடுச்சு......! இந்த மாதிரி ஒரு காதல் சிட்சுவேசன் நான் பார்த்தது இல்லீங்கோ.......!
அதயும் தான் ஒரு வாட்டி பாருங்களேன்....




இதிலிருந்து என்ன சொல்ல வர்ரேன்னா....
கல்லூரி ஒரு நல்ல திரைப்படம்.......
என்னா அது என்னயே பாதிச்சுடுச்சே,,,!
இத ஒத்துகிட்டா ஒரு காமென்ட் பன்னுங்க,,,,,,,,,இல்லாட்டியும் ஒரு காமென்ட் பன்னுங்களேன் சாமியோவ்...!

1 comment:

  1. நிச்சயமாகவே... கல்லூரிக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்லும் சினிமா.
    எழுத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete