Tuesday, February 24, 2009

இசை புயலுக்கு வாழ்த்துகள்



ஆஸ்கர்....இவ்வளவு நாள் மதில் மேல் பூனை, இன்று இந்தியா பக்கம்...ரஹ்மானுக்கு நன்றி..
இது இப்ப எல்லா ப்லாக்லயும் கானுர ஒரு பொது விஷயம்...ஆனா இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை, ரஹ்மான் இந்த விருதுக்கு தகுதியானவரா...?

ஒரு ரசிகனின் பார்வையில் ரஹ்மானுக்கு விருது குடுத்ததனால ஆஸ்கார் பெருமை அடயவேனும், என்ன ஒரு இசையமைப்பாளர், எத்தனை படங்கள், அதுல எத்தனை வர்தக ரீதியா வெற்றி பெற்றவை....


ஒரு ரசிகனா ரஹ்மான் என் வாழ்கை முழுதும் ஆதிக்கம் செலுத்துறார்,
முதல் காதல், அதன் சந்தோசம், உயிர் நட்பு, பிரிவு வலி, தாங்கொனா துயரம் (love failure) - எல்லாம் எல்லார் வாழ்கயிலும் இசை வடிவமா தான் நினைவில் இருக்கும். என்னை போல் நிறைய ரசிகர்களுக்கு இந்த எல்லா உணர்வுகளும் ரஹ்மானின் இசையாத்தான் நினைவில் இருக்கும், உண்மையா சொல்லனுமின்னா நாம் எல்லாம் இசையோடே வாழுரோம், நாம ரஹ்மான் காலத்திலவாழ்றதுக்கு பெறுமைப்படவேணும், (proud to live in your time)


அடுக்கடுக்கான விருதுகள் ரஹ்மானுக்கு குவிந்தாலும் ஆஸ்கார் என்பது ஒரு கனவாவே இருந்தது(அவருக்கு மட்டும் இல்லை, முழு இந்தியாவுக்கும் தான்),,, இதோ அதுவும் இனி அவர் வசம்,,,,,,,,வாழ்த்துகளும் வாய்புகளும் குவிகிறது,,,குவியும்,,,

வாழ்த்துபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...! ஏதோ ஆஸ்கர் ஒரு எட்டா கனியாகவும் அதை அடைவது ஒரு கனவு மாதிரியும் உருவகப்படுத்துவது எனக்கு உடன்பாடு இல்லை, நாம் அனைவரும் ஆஸ்காரை ஒரு படி மேலாகவும் ரஹ்மான் அதை அடைந்ததனால் பெருமை அடைந்ததாகவும் வாழ்த்துரோம், உண்மையா, நாம ரஹ்மானை வாழ்த்துறமா.....இல்லை ஆஸ்கார துதிக்கிரோமா தெரியல...!

என் பார்வையில் ரஹ்மானுக்கு இது எப்பவோ கிடைச்சிஇருக்க வேணும்......! தில்சேயிலயும், ரோஜாவிலயும், ஏன் "ரங் தே பசந்திலயும்", இல்லாத இசையயா "ஸ்லம் டாக் மில்லினர்" கொடுத்துட்டு.....!

"சைய சையா.....உலகம் முழுவதுமான பீபீசி கவுன்டின்கில ரெண்டாவதா வந்தது,,,,,, (முதல் பாடல்-ராக்கம்மா....-தளபதி)",
யாராவது The Bank job படம் பார்த்திங்களா....! அதுல டைட்டில் சாங் நம்ம "சைய சையா" தான்,,,(ஒரு முறை பாருங்க..! clive oven & denzil washington கலக்கி இருப்பாங்க..!)
இவ்வளவு பெருமை உள்ள தில்சே..! ஏன் ஆஸ்கார் போகல...! ????
இவ்வளவு ஏன்..! நம்ம ஆமிர்கானின் லகான், எவ்வளவோ தகிடுதத்தங்களுக்கு பிறகு நாமினேட் பன்னப்பட்டாலும் அது இசைக்கு இல்லை,,, படத்துக்கு மட்டும் தான்...!

அப்ப "ஸ்லம் டாக் மில்லினர்" எந்த விதத்துல சிறந்த்தது...! ஒரே வித்தியாசம்,,, அதன் டிரெக்டர்....ஒரு வெள்ளைகாரன்...... மற்றும் அது ஒரு இங்லீஸு படம்...! அவ்வளவுதான்.....! (நான் அந்த படத்த எந்த விதத்திலயும் குறைச்சி மதிப்பிடலை,,,,,, அருமையான திரைக்கதைக்காக மூனுவாட்டி பார்த்துட்டேன்),

இந்த படம் ARRஐ ஹாலிவூட்டில நிரூபிச்சது அவ்வளவுதான்.....
ஆனா ரஹ்மான் தன்னை எப்பவோ மொழிபேதமின்றி உலக ரசிகர்கள் மத்தியில் நிரூபிச்சிட்டார்.....

அவர் மட்டும் இல்லை, நம்ம தமிழர்களில் ஆஸ்கர் என்ன அதுக்கும் மேல தகுதியான எத்தனயோ கலைஞர்கள் இருக்காங்க...(சிவாஜி, இளயராஜா, கமல் ....நான் ....)ஹிந்தில,,(அமிதாப், குருஹரன்.....) லிஸ்ட் இன்னும் நீளும்..........இவங்க எல்லாம் எந்த விதத்திலும் குறைஞ்ஜவுங்க இல்லீங்கோ,,, ஆனா என்ன ஆஸ்கர் கதவை தட்டும் அளவு ஒரு ஆங்கில வாய்ப்பு இன்னும் இவங்களுக்கு வரலை,,,,,, அவ்வளவுதான்...!

மறுபடியும் சொல்லுரேன்,,, ஆஸ்கர் ரஹ்மானுக்கு எப்பவோ தரப்பட்டிருக்க வேணும்,,,,,, எப்படி இருந்தாலும் its better late than never...!
ஆனா உண்மயான ஆஸ்கர ரசிகர்கள் எப்பவோ அவருக்கு தங்களுடய மனதில் தந்திட்டாங்க.......! அது என்னைக்கும் நிலைக்கும்..!

கடைசியா ஒரு வேண்டுகோள் ரஹ்மான் ஜீ,,, மேடயில தமிழில பேசி பெருமை பட வச்சிட்டிங்க...! அதே மாதிரி எப்பவுமே தமிழ் சினிமாவிலில நல்ல இசை தருவீங்கன்னு நம்புரேன் (பேராசைதான்..!),,, ஏன்னா எங்களுக்கு நீங்க வேணும்..!

1 comment:

  1. இன்றுதான் உங்கள் பதிவைப் பார்வையிட்டேன்! இதில் கருத்தரை இடுவது எனக்கு மகிழ்வைத் தருகிறது. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்!

    ReplyDelete