
புலம்பெயர்வின் வலி
கடல் படிந்த முகத்தோடு
கண்கள் தேடிய முகாமினுள்
கூட்டங்கள் நுழையக் காண்கிறோம்
கைகளை இழந்தோ
கால்களை இழந்தோ
தத்தியோ
தாவியோ
வேண்டா வெறுப்புடனோ
எப்படியோ
சேர்கின்றனர்
மந்தையடைப்பாய்
விந்திய நாடு
ஏற்பதைக் காண்கிறோம்
வத்திய முலையோடு
கைம்பெண்கள்
அதை உறிஞ்சிக் கொண்டிருக்கும்
கண் திறக்கா சிசுக்கள்
சீழ்வடியும் புண்களோடு
இளைஞர்கள்
இன்றோ நாளையோ
கண்மூடக் காத்திருக்கும்
முதியவர்கள்
அனைவரையும்
அலட்சியமாய்
அன்பில்லாதமனமாய்
கைதிகளாய்
அடைத்து
முகாமை பூட்டிச் செல்லுகையில்
ஒரு குரல் மட்டும்
கிசுகிசுக்கிறது
" நம்மட நாட்டிலே செத்துப் போயிருக்கலாம் "
மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள் மனது வலிக்கிறது வரிகளை வாசிக்கும்போது
ReplyDelete